வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 28 டிசம்பர் 2021 (13:57 IST)

21 மாதங்களுக்கு பின் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் நேரடி விசாரணை!

சென்னை ஐகோர்ட்டில் 21 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 20 மாதங்களுக்கு மேலாக ஆன்லைனில் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தனர் என்பதும் ஒரு சில வழக்குகள் மட்டும் நேரடியாக விசாரிக்கப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 21 மாதங்களுக்கு பிறகு சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட்டில் அனைத்து வழக்குகளும் இனி நேரடியாக விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வரும் ஜனவரி மூன்றாம் தேதி முதல் அனைத்து வழக்குகளும் நேரடியாக விசாரிக்க வேண்டும் என நீதி மன்ற பதிவாளர் தனபால் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது