திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (14:49 IST)

கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல முடியுமா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம்,  ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கிய விவகாரத்தில், சட்டவிரோதமாக பணம் கைமாறியதாக குற்றம் சாட்டப்பட்டார். இதனையடுத்து கார்த்திக் சிதம்பரத்தை தேடப்படும் நபராக நீதிமன்றம் அறிவித்து லுக் அவுட் நோட்டீசும் வெளியிட்டது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் இந்த மனு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் இருந்து கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் வெளிநாடு சென்றால் சாட்சிகளை அழித்துவிடுவார் என்றும் வாதாடியது

இந்த நிலையில் இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு  செல்லும் உரிமையை பறிக்க முடியாது என்றும் அதே நேரத்தில் அவர் வெளிநாடு செல்ல ஒருசில நிபந்தனைகளும் விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அந்த நிபந்தனையில் கார்த்திக் சிதம்பரம் செல்லவுள்ள நாடு, தங்குமிடம், பயணப்பட்டியல் ஆகியவற்றை அவர் சிபிஐக்கு தெரிவித்துவிட்டு வெளிநாடு செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது