ஹைக்கோர்ட்டாவது.. அவமரியாதையாய் பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை என்ன? – நீதிமன்றம் கேள்வி
சில ஆண்டுகளுக்கு முன் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியது குறித்த நடவடிக்கைகள் மீது நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு அப்போது தமிழக பாஜக தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா நீதிமன்றம் குறித்து அவமரியாதையாய் பேசியதாக வெளியான வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில் அவர் அவ்வாறு பேசியதற்கு எதிர்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில் அந்த பிரச்சினையே பலரது கவனத்தில் இருந்து மறைந்து போன நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய எச்.ராஜா மீது இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இருப்பது ஏன் என காவல்துறையை கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், ஏப்ரல் 27க்குள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என எச்சரித்துள்ளது.