செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (12:00 IST)

திட்டுனா.. பதிலுக்கு திட்டாதீங்க! வீடியோ எடுங்க! – காவலர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் முழு ஊரடங்கு நீடித்தது. தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தளர்வுகளை தொடர்ந்து மக்கள் பல இடங்களிலும் மீண்டும் கூட்டம் கூட்டமாக குவிவதால் மீண்டும் கொரோனா அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் “ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை கணிவுடன் நடந்து கொள்வதை மக்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. வாகன சோதனையின்போது மக்களில் யாராவது தவறாக பேசினால், காவலர்கள் திரும்ப பேச வேண்டாம். அதை வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளது.