வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (19:52 IST)

சென்னை மருத்துவர் உடல் அடக்க பிரச்சனை: தானாக முன்வந்து வழக்கை எடுத்த ஐகோர்ட்

சென்னையில் மருத்துவர் ஒருவர் இன்று கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தார் என்பதும் அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த பொதுமக்களில் சிலர் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்காக தனது உயிரையே தியாகம் செய்த ஒரு மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த பொதுமக்கள் மீது கடும் கண்டனங்களை பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா பலியான மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்த்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது 
 
இந்த நிலையில் இந்த விசாரணையில் தமிழக அரசு மற்றும் தமிழக காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசுக்கு ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை மருத்துவர் பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது