புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (09:20 IST)

உலகத்துலேயே அதிக சிசிடிவி உள்ள நகரம்! – உலக நகரங்களை பின்னுக்கு தள்ளிய சிங்கார சென்னை!

உலகிலேயே அதிகமான சிசிடிவி கேமராக்கள் உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகளவில் தற்போது குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் மேலும் பலவற்றிற்கும் சிசிடிவி கேமராக்கள் உபயோகமான ஒன்றாக உள்ளன. இந்நிலையில் விபிஎன் என்ற நிறுவனம் உலகில் அதிகமான சிசிடிவி கேமராக்கள் உள்ள நகரங்கள் குறித்த பட்டியலை தயார் செய்துள்ளது.

ஒரு சதுர கிலோமீட்டருக்கு எத்தனை கேமராக்கள் என்ற கணக்கில் உலகம் முழுவதும் 130 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 650க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் உலகில் அதிகமான சிசிடிவி கேமரா உள்ள நகரமாக சென்னை முதல் இடம் பெற்றுள்ளது.