புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னை மாநகராட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக எத்தனை தொகுதிகள் கொடுக்க உள்ளன என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 
 
பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து திமுக அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன
 
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மிகச் சில இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
200 வார்டுகள் கொண்ட சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களும் சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 வார்டு திமுக ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் இதனை வேறு வழியின்றி திமுக கூட்டணி கட்சிகள் பெற்றுக் கொள்ளவும் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 12 வார்டுகள் போக மீதி உள்ள 188 வார்டுகளில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது