புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 24 ஜூன் 2024 (15:44 IST)

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை.! தமிழக ஆளுநரிடம் அண்ணாமலை மனு..!

Annamalai
கள்ளக்குறிச்சி மரண விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர்.
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையை உலுக்கியுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
 
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர்,  ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய துயர சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி மனு அளித்தனர்.
 
Tamilasai
சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை:
 
ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

 
இந்த விவகாரத்தில் தமிழக அரசு அமைத்துள்ள சிபிசிஐடி விசாரணை தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் கூறினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை இடைநீக்கம் செய்வது, மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வது என்பதோடு இந்த விவகாரத்தை முடித்துக்கொள்ள தமிழக அரசு முயல்கிறது என்றும் அவர்கள் உண்மையை மறைக்கிறார்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார்.