செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (20:40 IST)

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்-டிடிவி. தினகரன்

dinakaran
பீகார் மாநிலத்தில் முதல்வர்  நிதிஸ்குமார்  தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி  நடந்து வரும் நிலையில், சமீபத்தில் அம்மா நிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இதுகுறித்த அறிவிப்பு புள்ளிவிவரங்களுடன் வெளியானது.
 
எனவே பீகாரை போன்று தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆணையை பிறப்பித்து, போதுமான நிதியை ஒதுக்கி, அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் முதல்வர் முக.ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
''பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியின மக்கள் வளர்ச்சிக்கும் அவர்களின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆணையை பிறப்பித்து, போதுமான நிதியை ஒதுக்கி, அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.