வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (14:33 IST)

அரசியலுடன் ஜாதி பின்னிப்பிணைந்துள்ளது - தொல். திருமாவளவன்!

மயிலாடு துறையில் கடந்த 2003 -ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்  மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். 
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன்.......
 
தமிழகத்தில் அரசியல் ரீதியாக இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது போடப்பட்டுள்ள அனைத்து அரசியல் வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
 
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று தெரிவித்த அவர், சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் நூறாம் ஆண்டு விழாவில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் தொல் திருமாவளவன் கூட முதலமைச்சராகலாம் என்று தெரிவித்திருந்தார் அவருக்கு எனது நன்றி. 
 
ஆனால் அகில இந்திய அளவில் ஜனாதிபதி பதவிக்கு தாழ்த்தப்பட்ட ஒருவர் வர முடியும் ஆனால் பிரதமர் பதவிக்கு வர முடியாது உத்தர பிரதேசத்தில் மாயாவதி தவிர்த்து வேறு யாரும் மாநில முதல்வர்கள் பதவிக்கு வர முடியவில்லை. அரசியலுடன் ஜாதி பின்னிப்பிணைந்துள்ளது தலித் அரசியலை பேசும் ஒருவர் தாழ்த்தப்பட்ட ஒருவர், பெரியார் அம்பேத்கரை பேசும் ஒருவர் மாநில அளவில் முதல்வராக வர முடியாத சூழல் உள்ளது. 
மற்றபடி எனக்கு முதல்வராக வரவேண்டும் என்று ஆசை இல்லை என்று தெரிவித்தார். 
 
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் தமிழகம் இணையவில்லை என்பதற்காக கல்விக்கான நிதியை ஒதுக்க மறுப்பது ஒன்றிய அரசின் மேலாதிக்கத்தை காட்டுகிறது என்று குற்றம் சாட்டினார்.
 
மேலும் மயிலாடுதுறையில் நூறு ஆண்டுகளைக் கடந்த ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் ஆர் எம் எஸ் தபால் சேவையை மூடுவதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்கிறது இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்.