திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 19 ஜூலை 2020 (12:44 IST)

கேப்டன் தொலைக்காட்சி நிருபர் கொரோனாவுக்கு பலி ! அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் கேப்டன் தொலைக்காட்சியின் திருப்பதி நிரூபர் பலியாகியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மேலும் கொரோனாவல் ஏற்படும் மரணங்களும் கடந்த வாரங்களில் அதிகமாகிக் கொண்டே செல்வது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் திருப்பதியில் திடீரென கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கேப்டன் தொலைக்காட்சியின் திருப்பதி நிருபராக இருந்த சுப்ரமணியம் என்பவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் மூச்சுதிணறல் காரணமாக திருப்பதியில் உள்ள பத்மாவதி கரோனா வார்ட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்துள்ளார்.