கரூர் வழியே செல்லும் 9 ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு
கரூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
தமிழகத்தில் உள்ள முக்கிய நகராட்சிகளில் ஒன்று கரூர். இதன் வழியே இயக்கப்பட்டும் 9 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளதாவது:
கோவை வஞ்சிபாளையம் – சோமனூர், சாமல்பட்டி- தசம்பட்டி- தாதம்பட்டி, குளித்தலை- பேட்டைவாய்த்தலை உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கோவை- கரூர் வழியே இயக்கப்பட்டும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.