செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:56 IST)

நிவர் புயல் எதிரொலி… C A தேர்வுகள் ஒத்திவைப்பு !

நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் நடக்க இருந்த சி ஏ தேர்வுகள்  அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தென்மேற்குக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் பகுதியில் கரையைக் கடக்க உள்ளது. இதனால் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த CA தேர்வுகள் நிவர் புயல் காரணமாக டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்று வந்த மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.