புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (16:13 IST)

கருவாடு மீனாகாது... சசிகலா ஆடியோ குறித்து அதிமுக எக்ஸ் அமைச்சர் நக்கல்

கருவாடு மீனாகாது, அப்படியே ஆனாலும் அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது என சி.வி.சண்முகம் பேட்டி.
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் கட்சியை காப்பாற்றா தான் வருவதாய் சசிக்கலா பேசியுள்ளதாக வெளியாகியுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளதாவது, சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கும், அவருக்கும் உதவியாளராக இருந்தவர் அவ்வளவுதான். ஆனால் அதிமுகவை அடைவதற்கு அவர் முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது. கருவாடு மீனாகாது, அப்படியே ஆனாலும் அதிமுகவை சசிகலாவால் கைப்பற்ற முடியாது என்று கூறினார்.