வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (23:59 IST)

பேச்சுவார்த்தை தோல்வி: நாளை முதல் பேருந்துகள் இயங்குமா?

தமிழக அரசுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று மாலை முதலே பெரும்பாலான பேருந்துகள் ஓடவில்லை. ஒருசில பேருந்துகளை ஓட்டுனர்கள் பாதியில் நிறுத்திவிட்டு பேருந்துகளை இயக்க மறுத்ததால் நடுவழியில் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

இந்த நிலையில் அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாகவும், அரசிற்கு பாடம் புகட்ட தொடர் வேலைநிறுத்தம் செய்யவிருப்பதாகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் பேருந்துகள் இயங்காது என்றே தெரிகிறது

இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்ளிட்ட சங்கங்கள் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ள போதிலும் அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் அரசின் அறிவிப்பை ஏற்றுக் கொண்டுள்ளதால் அவர்கள் பணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பேருந்துகள் இயங்கக் கூடும் என்பதால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் வரை பயணிகளுக்கு மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களே துணை என்று கருதப்படுகிறது.