1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2023 (13:18 IST)

கனிமொழி எம்பியுடன் பேருந்தில் பயணம் செய்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்

திமுக எம்பி கனிமொழி  இன்று கோவையில் பேருந்தில் பயணம் செய்த நிலையில் அந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
கோவை பீளமேடு வரை பேருந்தில் இன்று கனிமொழி எம்பி பயணம் செய்த நிலையில் அவர் அந்த பேருந்தின் பெண் ஓட்டுனர் ஷர்மிளாவுடன் பேசினார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வந்தன. 
 
இந்த நிலையில் இன்று திமுக எம்பி கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில் திடீரென ஓட்டுனர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவின் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்ததை அடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கோவை பகுதியில் பெயரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran