1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 7 டிசம்பர் 2016 (18:09 IST)

ஜெயலலிதா பிறந்த வீடு தற்போது மது கிளப் - அதிர்ச்சி தகவல்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த வீடு தற்போது ஒரு கேளிக்கை விடுதியாக செயல்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
ஜெயலலிதாவின் பூர்விகம் கர்நாடகத்தில் உள்ள மைசூரில் உள்ள மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை என்பதாகும். அவரின் முன்னோர்கள் அங்குதான் வசித்துள்ளனர். ஜெயலலிதாவும் இங்குதான் பிறந்துள்ளார்.
 
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா தனது குழந்தைகளுடன் அங்கு வசித்த போது ஜெய விலாஸ், லலிதா விலாஸ் என்ற பெயரில் 2 வீடுகள் இருந்துள்ளது. அதன்பின் அவரின் கணவர் ஜெயராமின் மறைவுக்கு பின், பெங்களூருக்கு இடம் பெயர்ந்துள்ளார். அப்போது அந்த வீடுகளை விற்று விட்டாரம். 
 
அந்த வீடு தற்போது சொர்ண விலாஸ் என மாறியுள்ளது. மேலும், அந்த வீடு தற்போது ஒரு தனியார் கேளிக்கை விடுதி (கிளப்) ஆக மாறியுள்ளதாம்.  அங்கு, மது விற்பனை கூடமும் செயல்படுவதாக தெரிகிறது
 
இந்த தகவலை, அந்த வீட்டின் புகைப்படத்துடன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒருவர் பதிவு செய்துள்ளார்.