வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (15:48 IST)

கிளம்புங்கடா பிரச்சாரத்திற்கு... அதிமுகவுக்காக வண்டி கட்டி கிளம்பும் பாஜக!

இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு கொடுக்குமா என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் பாஜகவின் நிலைபாட்டை இல கணேசன் வெளிப்படுத்தியுள்ளார். 
 
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக மற்றும்  நாம் தமிழர் கட்சிகள் தயாராகி வருகின்றன.  
 
இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக, பாமக, சரத்குமார் கட்சி போன்ற கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளது.
ஆனால், அதிமுக கூட்டணியில் முக்கிய இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியான பாஜகவிடம் இதுவரை அதிமுக தலைவர்கள் ஆதரவு கேட்கவில்லை. இனிமேலும் ஆதரவு கேட்பார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் பாஜக முக்கிய தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், நாங்கள் நாங்குநேரி தொகுதியை அதிமுகவிடம் கேட்கவில்லை. அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.  
 
இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஸ், பாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது? பாஜகவுடனான கூட்டணி தொடர்கிறது. எதிர்காலத்திலும் இந்த கூட்டணி தொடரும் என பதில் அளித்து, சர்ச்சைகளுக்கு முற்றிபுள்ளி வைத்தார். 
இருப்பினும் பாஜக தரப்பில், அதிமுகவிற்கு ஆதரவு கொடுப்போம் என யாரும் கூறாத நிலையில், பாஜக மூத்த தலைவரான இல கணேசன், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக் தேர்த பிரச்சாரம் மேற்கொள்ளும் என தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்போம்...