1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:28 IST)

தமிழக அரசியல் சூழ்நிலை - ரஜினியை களம் இறக்க பாஜக முடிவு?

தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ள பாஜக மேலிடம் நடிகர் ரஜினிகாந்தை பாஜக சார்பில் களம் இறக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால், தன்னையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என சசிகலதா ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல், தன்னை கட்டாயப்படுத்தியே ராஜினாமாவை சசிகலா பெற்றுக் கொண்டார். தற்போது என் ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் என ஆளுநரிடம் ஓ.பி.எஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் 24 மணி நேரம் ஆகியும் ஆளுநர் தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.
 
தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக  சட்டசபையில் ஓட்டெடுப்பிற்கே வாய்ப்பு கொடுக்காமல், 356ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது. அப்படி நடந்தால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்... திமுக தரப்பில் கருணாநிதி முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக முடங்கியுள்ளார். அதிமுகவின் சக்தியாக விளங்கிய ஜெயலலிதாவும் மரணம் அடைந்து விட்டார்.


 
 
எனவே, தமிழகத்தில் தங்களின் தடத்தை பதிய நினைக்கும் பாஜக, நடிகர் ரஜினிகாந்தை களம் இறக்க ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.. பாஜக சார்பாக ரஜினியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க திட்டம் தீட்டி வருவதாகவும், இது தொடர்பாக, பாஜக பிரமுகர் ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியின் மூலமாக ரஜினியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது..
 
இந்நிலையில், எந்த காரணத்தைக் கொண்டு அரசியலுக்கு வரக்கூடாது என பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ரஜினிக்கு கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...