பொன்முடி வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கல்ல. திருமாவளவனுக்கு பாஜக பதிலடி..!
முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு அல்ல என்றும் நீதிபதி தாமாகவே முன்வந்து எடுத்த வழக்கு என்றும் திருமாவளவனுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
நேற்றைய செய்தியாளர்களிடம் சந்தித்த திருமாவளவன் கிழமை நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய நிலையில் இதற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:
பொன்முடி வழக்கு கீழமை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இது மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கல்ல. நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்களே தன்விருப்ப அடிப்படையில் அவரே எடுத்து கொண்டு விசாரித்த வழக்கு என்பதை திருமாவளவன் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு கட்சியின் தலைவர் என்று சொல்லிக்கொள்பவர், பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர். வழக்கு குறித்து எதுவும் தெரியாமல் கண்டதையும் பேசுவது கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு தான். திருமாவளவன் சொல்வது போன்று தன் விருப்ப அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கல்ல. அப்படியே தன் விருப்ப அடிப்படையில் எடுத்து கொண்டிருந்தாலும் தவறல்ல. திமுகவின் கொத்தடிமைகளாக இருப்பவர்கள் மற்ற கட்சியினரை அடிமைகள் என்று சொன்னது தான் வெட்கக்கேடு.
Edited by Siva