வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (17:04 IST)

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு பாஜக நிதி உதவி..! அண்ணாமலை அறிவிப்பு..!

Annamalai
கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரை அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, மத்திய அரசின் திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படும் என்றார். 
 
பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்த அண்ணாமலை, கள்ளச்சாராயம் சம்பவம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்ததாக கூறினார்.
 
சாராயம் விற்பனை நடைபெற்றதை அரசு வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளது என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டினர். மேலும்  கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து ஜூன் 22 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.


தமிழகத்தில் ஆயிரம் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.