வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 7 மே 2016 (21:41 IST)

பிச்சை கேட்கிறேன் அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள்: நாஞ்சில் சம்பத்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத், உங்களிடம் பிச்சை கேட்கிறேன், யாசகம் கேட்கிறேன் அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறினார்.


 
 
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் அதிமுக தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், ஒவ்வொரு பிரச்சாரத்திலும் ஒருவிதமாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் “அம்மாவின் பொதுக்கூட்ட பேச்சை கேட்பதற்காக வெயில் செத்து மடிய தயார்”  என்று கூறினார் நாஞ்சில் சம்பத்.
 
இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 3-ஆம் தேதி கோவை பிரச்சாரத்தில் “தமிழக வள்ர்ச்சி குறித்து ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா” என்று போசினார்.
 
இதையடுத்து பிராச்சாரங்களில் அதிரடியாக பேசி வந்த நாஞ்சில் சம்பத், இன்று ராஜபாளையம் தொகுதியில் பிரச்சாரம் செய்த போது “உங்களிடம் பிச்சை கேட்கிறேன், யாசகம் கேட்கிறேன் அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று பேசினார்.