ஆட்டோ ஓட்டுனர் வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.9,000 கோடி.. சென்னை டிஎம்பி வங்கியில் பரபரப்பு..!
ஆட்டோ ஓட்டுனரின் வங்கி கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டதால் தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி அதிகாரிகள் காட்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வங்கி கணக்கில் திடீரென ரூ.9,000 தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வரவு வைத்துள்ளது.
இதனை அடுத்து தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணத்தை வங்கி தரப்பு வழக்கறிஞர் மூலம் ஆட்டோ ஓட்டுனர் இடம் பேச்சுவார்த்தை நடத்தி திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.
இதன் நிலையில் ஆட்டோ ஓட்டுனர் தன் நண்பருக்கு அனுப்பி வைத்த ரூ.21,000 தவிர மீதி உள்ள அனைத்து தொகையும் வங்கி நிர்வாகம் திரும்ப பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Mahendran