1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2023 (12:01 IST)

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை விவகாரம்: அரசு மருத்துவர் சஸ்பெண்ட்..!

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
 
குழந்தை விற்பனையில் அரசு மருத்துவர் அனுராதா உடந்தையாக இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மேலும் சிறுநீரக விற்பனையிலும் ஈடுபட்டது குறித்து தெரியவந்துள்ளதால் அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். குற்றம் உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் அனுராதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
 
 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு என்ற பகுதியில் விசைத்தறி தொழிலாளி தம்பதிக்கு கடந்த 12ஆம் தேதி பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையை அங்கு மகப்பேறு மருத்துவராக பணிபுரியும் அனுராதா என்பவர் புரோக்கர் மூலம் இரண்டு லட்ச ரூபாய்க்கு பேசி குழந்தையை விற்பனை செய்ததாக தெரிகிறது.  
 
இது குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் கலெக்டர், காவல்துறைக்கு புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில்  குழந்தை விற்பனை முயற்சி தடுக்கப்பட்டதாகவும்  அரசு மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
 
Edited by Mahendran