1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (08:47 IST)

ஆடி கார் ஐஸ்வர்யா ஜாமீன் கேட்டு மீண்டும் மனு

குடி போதையில் காரை ஓட்டிச்சென்று தொழிலாளி ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார் பிரபல தொழில் அதிபரின் மகள் ஐஸ்வர்யா. இவர் பிரபல விலை உயர்ந்த காரனா ஆடி காரை ஓட்டி சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியதால் ஆடி கார் ஐஸ்வர்யா என கூறப்படுகிறார்.


 
 
சென்னை, தரமணியில், மதுபோதையில் கார் ஓட்டி ஐஸ்வர்யா ஏற்படுத்திய இந்த விபத்தில் முனுசாமி என்ற தொழிலாளி ஒருவர் இறந்தார். இந்த வழக்கில்,  ஜாமீனில் வெளியே வர ஆடி கார் ஐஸ்வர்யா தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
 
ஏற்கனவே இரண்டு முறை ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3-வது முறையாக ஜாமீன் கோரி ஆடி கார் ஐஸ்வர்யா மனுதாக்கல் செய்துள்ளார்.
 
தான் பெண் என்பதாலும், கடந்த ஒரு மாத காலமாக சிறையில் இருப்பதாலும் தனக்கு ஜாமீன் வழங்குமாறு ஐஸ்வர்யா தனது மனுவில் கூறியுள்ளார். ஜாமின் மனு தொடர்பாக அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.