புதன், 5 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2015 (13:08 IST)

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அட்டாக் பாண்டி கைது

மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தா பிரபல ரவுடி அட்டாக் பாண்டி இன்று மும்பையின் புறநகர் பகுதியான வஷியில் கைது செய்யப்பட்டார். 

மதுரையில் திமுகவின் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த பொட்டு சுரேஷ், கடந்த மூன்று ஆண்டுக்கு முன் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். அட்டாக் பாண்டி, இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாக இருந்தார். 
 
இவர் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் நெருக்கமாகவும் வலது கையாகவும் செயல்பட்டுவந்தவர் என்பது கூறப்படுகிறது.

அட்டாக் பாண்டி, முன்னாள் மதுரை வேளாண் விற்பனைக்குழுவின் தலைவராக இருந்தார். மேலும், மதுரை மாநகர திமுகவின் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டார். மதுரையில் கொலை,ஆள் கடத்தல், நில அபகரிப்பு என இவர் மீது நிறைய புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.