வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2024 (17:07 IST)

கிரிக்கெட்டில் இலங்கை தோற்றதால் மீனவர் மீது தாக்குதல்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்ததால் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதை இலங்கை கடற்படை தீவிரப்படுத்தியிருக்கிறது. ஒரு மாதத்துக்குள் சுமார் 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்து அந்நாட்டு சிறைகளில் அடைத்திருக்கிறது.  
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற கப்பல் மீது,   இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதியது. இதில் மலைச்சாமி என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மீனவர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்ததால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.


மேலும் இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் வாய் மூடி உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் இலங்கை அரசு பயபட்டனர் என்றும் ஆனால், கடந்த ஒராண்டில் அதிக அளவிலான தாக்குதல் நடைபெற்று வருகிறது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்