பணம் கொட்டும் ஏடிஎம் - வாரிச் சென்ற பொதுமக்கள்!

Written By Dinesh
Updated: புதன், 28 செப்டம்பர் 2016 (22:51 IST)
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது.


 
 
இங்க நேற்று மாலை அதே கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் தனது வங்கி ஏடிஎம் கார்டை செலுத்தி பணம் எடுத்துள்ளார். அப்போது ரூ.6,500க்கு பதிலாக ரூ.300 மட்டுமே வந்ததாம். ஆனால் தனது வங்கி கணக்கில் ரூ.6500 எடுத்ததாக தகவல் செல்போனில் வந்துள்ளது. 
 
அப்போது சிலர் கூறுகையில், இந்த ஏடிஎம்மில் ரூ.100க்கு பதிவு செய்தபோது ரூ.500 என்று ஒருவருக்கு வந்துள்ளது. மேலும் ரூ.200க்கு- ரூ.1000, ரூ.300க்கு- ரூ.1500 வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த இப்பகுதி மக்கள் பலர் உடனடியாக பணத்தை இந்த ஏடிஎம் மையத்தில் போட்டி போட்டு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. 
 
இதனால் ஏடிஎம் மையத்தில் இருந்த பணம் மிக விரைவில் காலியாகி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட காமராஜ் இன்று வங்கிக்கு சென்று புகார் செய்ய உள்ளார். 

எல்லாம் காட்டு

கரூர் கூட்ட நெரிசல்!.. 31 பேருக்கு விஜய் கொடுத்த அரசு பணி ரத்து!.. நீதிமன்றம் அதிரடி...

கடந்த வாரம் முழுவதும் நஷ்டம்.. இந்த வாரத்தின் முதல் நாளே உச்சம்.. பங்குச்சந்தை நிலவரம்..

அடுத்த போராட்டம் பஞ்சாபில்.. கரப்பான்பூச்சி அறிவிப்பு.. ஆம் ஆத்மி அரசு கொடுத்த ரியாக்சன்..

கூகுள் பிக்சல் 11 சீரிஸ் விலை தாறுமாறாக உயரும்.. 100 டாலர் வரை விலை உயர வாய்ப்பு...

கருவின் பாலினத்தை சொன்ன விவகாரம்!. 8 வாரத்திற்குள் நடவடிக்கை!.. இர்ஃபான் சிக்குவாரா?..

அடுத்த கட்டுரையில்
Show comments