புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (11:55 IST)

ஜோதிடர் நெல்லை வசந்தன் காலமானார்!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜோதிட கணிப்புகளால் பிரபலமான ஜோதிடர் நெல்லை வசந்தன் திடீரென காலமானார். 

 
அண்மையில் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை குறித்து நெல்லை வசந்தன் கணித்திருந்தார். ஜோதிடம், ஆன்மிகம் என இரண்டிலும் பெரும் பங்காற்றிய இவர் தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வின் போதும் இவரது கணிப்புகளைக் கூறியது துல்லியமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஜோதிடர் நெல்லை வசந்தன் திடீரென காலமானார். மக்கள் மனதில் நன்மதிப்பை பெற்ற இவரின் மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.