செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 4 ஜூன் 2016 (16:40 IST)

ரூ.570 கோடியில் 30% கமிஷன் பெற்ற அருண் ஜெட்லி: இளங்கோவன் புதிய குண்டு

தமிழக சட்டசபை தேர்தல் சமையத்தில் திருப்பூர் அருகே மூன்று கண்டெய்னர்களில் பிடிபட்ட ரூ.570 கோடியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 30 சதவீதம் கமிஷன் பெற்றதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


 
 
ரூ.570 கோடி பிடிபட்டபோது விளக்கம் அளிக்காமல் மூன்று நாள் கழித்து உரிமை கோரியது ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா. இதனையடுத்து இந்த பணம் ஜெயலலிதாவின் பணம் என்றும், இதில் மத்திய அமைச்சர் ஒருவரின் தலையீடு உள்ளது என்றும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் கூறி வந்தன.
 
இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை இதற்கு மறுப்பு தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன், திருப்பூரி பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தில் 30 சதவீதம் அருண் ஜெட்லி பெற்றதாக குற்றம் சாட்டினார். தமிழிசை இந்த விவகாரத்தில் தவறு நடக்கவில்லை என கூறுவது வியப்பாக உள்ளது என்றார்.
 
இந்த ரூ.570 கோடி தொடர்பாக நியாயமான சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறிய திமுக தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை தானும் வைப்பதாக கூறிய இளங்கோவன். இந்த பணம் தொடர்பாக தமிழக அரசு பதில் கூறுவதை விட, இந்த விவகாரம் சட்டப்பூர்வமாக, ஆதரப்பூவமாக தான் கையாளப்பட்டது என நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தமிழிசைக்கு தான் உள்ளது என்றார்.