சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மிகவும் புகழ் பெற்ற ஆருத்ரா தரிசன உற்சவம் ஜனவரி 4ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்க இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசனம் என இரண்டு விழாக்கள் பழங்காலம் முதல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஜனவரி 4-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜனவரி 12ஆம் தேதி தேர் திருவிழா, ஜனவரி 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களும் மாலை 6 மணிக்கு சித்சபை முன்பு மாணிக்கவாசகம் எழுந்தருளி திருவெம்பாவை உற்சவம் நடைபெறும் என்றும் விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சதர்கள் செய்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தை காண அதிக பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
Edited by Mahendran