வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (15:19 IST)

கொரொனாவால் இறப்பவர் குடும்பத்தாரிடம் லஞ்சம் கேட்கிறீர்களா ? உதயநிதி டுவீட்

சீனாவில் இருந்து உலமம் முழுவதும் பரவிவரும் கொரொனா வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1,51,11,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 11,92 ,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1,80,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுக்கக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் மகனும் நடிகருமானஉதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது ,

கொரோனாவால் இறப்பவர் குடும்பத்தாரிடம் ரூ.10000 முதல் 15000 வரை லஞ்சம் கேட்கிறீர்களா என அரசுக்கு எதிராகச் சாட்டை சுழற்றியிருக்கிறது உயர்நீதிமன்றம். பணத்துக்காக 13 அப்பாவிகளைச் சுட்டுக்கொன்ற கூட்டம், கொரோனாவால் மரணிப்போரின் நெற்றிக்காசைக்கூட தன் கஜானாவாகப் பார்ப்பது கேவலம்! என்று பதிவிட்டுள்ளார்.