வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 19 அக்டோபர் 2023 (14:29 IST)

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மேல்முறையீடு

senthil balaji
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில்  ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த மனு மீது விசாரணை நடந்த போது அமலாக்கத்துறை தரப்பில் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த நிலையில் இருதரப்பின் வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில்  ஓரிரு நாளில் இந்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர்  உச்ச  நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.