Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தலைமையில் செயல்பட்டிருந்தால் தேர்தலில் ஜெயித்திருக்கலாம்… சசிகலாவின் மற்றொரு ஆடியோ!

Updated: வெள்ளி, 25 ஜூன் 2021 (12:07 IST)
அதிமுக உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து சசிகலாவுடன் தொலைபேசியில் பேசி வருவதல் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை கட்சியை காப்பாற்ற வரவேண்டும் என தொண்டர்கள் சிலர் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்துள்ளனர். இது சம்மந்தமான ஆடியோக்கள் வெளியாகி சசிக்லாவோடு பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இப்போது சசிகலா ஈரோட்டைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரோடு பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ‘என் தலைமையில் கட்சி செயல்பட்டிருந்தால் நாம் வென்றிருக்கலாம். அம்மா தலைமையில் நாட்டிலேயே மூன்றாவது பெரியக் கட்சியாக இருந்தோம். கொரோனா தொற்று பிரச்சனைகள் முடிந்ததும் நான் அரசியலுக்கு வருவேன்’ என்று கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது!.. ஆர்.எஸ்.பாரதி ஆத்திரம்!...

சோத்துக்கு வழியில்ல!.. விஜய்க்கு வசதியான ரூம் கேட்குதா?!. பழனிச்சாமி கடும் தாக்கு!..

டாஸ்மாக்கில் 10 வகை பிராந்திகளுக்கு தடை!.. தவெக அரசு அதிரடி...

சமையல் எரிவாயு சிலிண்டர் e-KYC செய்ய ஆகஸ்ட் 16 கடைசி தேதி.. செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காதா?

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வேலை கொடுக்க கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்..

அடுத்த கட்டுரையில்
Show comments