Daily Horoscope
✕

நீட் தேர்வில் மேலும் 6 பேர் ஆள்மாறாட்டம்.. போலீஸ் விசாரணை

Written By Arun Prasath
Updated: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (13:33 IST)
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் கைதான நிலையில், தற்போது தமிழகத்தில் மேலும் 6 பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக விசாரணை நடந்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்பவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த விவகாரத்தில் நேற்று முந்திய நாள் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் உதித் சூர்யாவின் தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் இரண்டு மாணவர்கள், நீட் மாறாட்ட விவகாரத்தில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் அவர்களில் ஒரு மாணவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என தீர்ப்பு வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்ததுள்ளது. மேலும் அதில் இரண்டு பேர் தோல்வி அடைந்துவிட்டதாகவும், மீதி 4 பேர் மருத்துவம் பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், தற்போது கைதாகியுள்ள உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனின் நண்பர் மகனும் அந்த 4 பேரில் ஒருவர் என்று வெளியாகியுள்ள தகவல் தான்.

எல்லாம் காட்டு

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

திடீரென உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை.. ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு..

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை...

மத்திய அமைச்சர் எல் முருகன் ராஜினாமா? தமிழக அரசியலை கவனிக்க போவதாக அறிவிப்பு...!

அடுத்த 48 மணி நேரத்தில்!.. வடகிழக்கு பருவமழை அப்டேட் கொடுத்த வானிலை மையம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments