1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (20:36 IST)

தமிழகம் குட்டி இலங்கையாக மாறுகிறது: பாஜக தலைவர் அண்ணாமலை

annamalai
தமிழகம் குட்டி இலங்கை ஆக மாறுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் 
 
அப்போது மது விற்பனையை நம்பி மட்டுமே ஆட்சி செய்யும் மாநிலம் தமிழகம் என்றும் இலவசங்களைக் கொடுத்தால் வளர்ச்சி எப்படி கிடைக்கும் என்பதை திமுக நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
 
மேலும் மருத்துவமனையில் இருந்த கேபி ராமலிங்கம் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் என்றும் இந்த அடக்குமுறையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்
 
மேலும் தமிழகம் குட்டி இலங்கை ஆக மாறுகிறது என்றும் இதனை தடுப்பதற்கு திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்