திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (14:28 IST)

உச்சநீதிமன்றத்தின் சரித்திர தீர்ப்பு: 10% இடஒதுக்கீடு குறித்து அண்ணாமலை

annamalai
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியானது. இந்த  தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வெளியிட்டுள்ள நிலையில் மூன்று நீதிபதிகள் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று என தீர்ப்பளித்தனர். இரண்டு நீதிபதிகள் செல்லாது என தீர்ப்பளித்தனர் 
 
இதனை அடுத்து நிலையில் அதிக நீதிபதிகள் 10 சதவீத இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு செல்லும் என தீர்ப்பளித்து உள்ளதை அடுத்து இந்த சட்டம் தொடர்ந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் 10% இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது என்றும் மோடி அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடு செல்லும் என்று சொல்லியிருப்பதை பாஜக வரவேற்கிறது என்றும் தெரிவித்துள்ளார் 
 
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படுவதால் மற்ற பிரிவு இட ஒதுக்கீடுகளுக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது என்றும் அவை அப்படியே இருக்கும் என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran