திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (07:29 IST)

அண்ணாமலை மாற்றப்படுகிறாரா? ஆசையுடன் காத்திருந்த பாஜக பிரபலங்களுக்கு ஏமாற்றம்..!

annamalai
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுகிறார் என்றும் அவருக்கு பதிலாக வேறொரு புதிய தலைவர் நியமிக்கப்படுகிறார் என்றும் கடந்த சில நாட்களாக வதந்திகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வதந்திக்கு பாஜக தலைமை முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவும் அண்ணாமலை தான் 2026 தேர்தல் வரை தலைவராக தொடர்வார் என்றும் களப்பணியை பாருங்கள் என்றும் டெல்லி தலைமை கூறிவிட்டதால் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை சந்தித்த அண்ணாமலை தனது லண்டன் பயணம் குறித்து விளக்கம் அளித்த நிலையில்   அண்ணாமலை லண்டன் செல்லும் கால கட்டத்தில் வேறொரு தலைவரை நியமிக்கும் திட்டம் டெல்லி தலைமையிடம் இல்லை என்றும் அவர் திரும்பி வரும் வரை செயல் தலைவர் ஒருவரை மட்டும் தற்காலிகமாக நியமிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே பாஜக தலைவர் பதவியை கைப்பற்றி விடலாம் என்று டெல்லிக்கு படை எடுத்த பாஜக பிரமுகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியின் ஆசியோடு அண்ணாமலை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் தலைவராக செயல்படுவார் என்றும் இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva