வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2022 (09:41 IST)

குண்டு வெடித்து 36 மணி நேரமாகியும் முதல்வர் பேசாதது ஏன்? அண்ணாமலை கேள்வி!

Annamalai
கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 36 மணி நேரம் ஆகியும் இன்னும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இதுகுறித்து பேசாதது ஏன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் கார் வெடிகுண்டு வெடித்து மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் டிஜிபி சைலேந்திரபாபு இது குறித்து நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் கோவையில் குண்டு வெடிப்பு நடந்து 36 மணி நேரங்கள் கடந்துவிட்டன. ஆனால் இதுவரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மக்களை சந்தித்து இதைப்பற்றி பேச தயங்குவது ஏன் என்ற கேள்வியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுப்பியுள்ளார். 
 
மேலும் இதுவரை தமிழகம் கண்டிராத தற்கொலைத் தாக்குதல் இந்த திமுக ஆட்சியில் நடந்து விட்டது என்றும் உயிர் சேதம் ஏற்படும் வரை பொறுமை காப்பீர்களா? அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
Edited by Siva