ஓரளவுக்கு மேல பேச்சு கிடையாது, வீச்சு தான்.. ‘ஜெயிலர்’ பட வசனத்துடன் அண்ணாமலை போஸ்டர்..!
ஓரளவுக்கு மேல பேச்சு கிடையாது, வீச்சு தான் என வசனத்துடன் கூடிய அண்ணாமலை போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என்பதும் இரு கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
குறிப்பாக பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை அண்ணாமலை தெரிவித்த நிலையில் அண்ணாமலையை பாஜக தலைமை பதவியில் இருந்து தூக்கினால் தான் கூட்டணி என அதிமுக கூறியுள்ளது
இந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வலுவடைந்துள்ள நிலையில் அண்ணாமலையின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான் என்ற ஜெயிலர் பட வசனம் ம் இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் பொதுமக்கள் கவனத்தை பெற்றுள்ளது.
Edited by Siva