திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (11:45 IST)

பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவனை சந்தித்த அண்ணாமலை.. நேரில் ஆறுதல்..!

நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.  
 
நாங்குநேரியில்  கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவன் மற்றும் அவருடைய சகோதரியை  மாணவர்கள் கும்பல் சரமாரியாக தாக்கியது என்பது இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த மாணவனை தமிழக அமைச்சர்கள் உள்பட பலரும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவரது சகோதரியை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். 
 
மேலும் அந்த மாணவனுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் பாஜக செல்லும் என்றும் அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார்
 
Edited by Siva