1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜூலை 2023 (12:38 IST)

மதுரை உயர்நீதிமன்றம் கலைஞர் போட்ட பிச்சை.. அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்..!

மதுரை உயர்நீதிமன்றம் கலைஞர் போட்ட பிச்சை என தமிழக அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு  தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 
 
பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்றார் திமுகவின் அமைப்புச்செயலாளர் திரு ஆர்எஸ் பாரதி அவர்கள். 
 
"சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை" என்கிறார் அமைச்சர் திரு எவ வேலு அவர்கள். 
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. 
 
தொடர்ந்து பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் திமுகவினரின் இது போன்ற அகங்காரமான பேச்சுக்களை,  தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தனது பேச்சை வாபஸ் பெறுவதாகவும் அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran