1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (12:38 IST)

வடிவேலுவின் கிணற்றை காணவில்லை மீம்ஸை பதிவு செய்த அண்ணாமலை.. என்ன காரணம்?

Annamalai
ரூபாய் 6.5 கோடியில் கொள்ளிடம் ஆற்று இடையில் கட்டப்பட்ட தடுப்பணை 6 மாதத்தில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வடிவேலுவின் கிணற்றை காணவில்லை என்ற மீம்ஸை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை ஆறு மாதத்தில் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே  பாலம் மண்ணரிப்பால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிய தடுப்பணை கட்டப்பட்டது.

இந்நிலையில் திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து நேற்று நள்ளிரவு 66,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், 6 மாதத்திற்கு முன் கட்டப்பட்ட தடுப்பணை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில் தடுப்பணை, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள அண்ணாமலை தடுப்பணை எங்கே என வடிவேலு  கிணற்றை   காணவில்லை என்ற மீம்சை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran