Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

Written By Siva
Updated: ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (10:03 IST)
அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது.
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள வளாக கல்லூரிகளில், பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கும். அதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9 வரை அறிமுக வகுப்புகள் நடைபெறும்.
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பிற தனியார் பொறியியல் கல்லூரிகளில், முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கும்.
 
முதல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 16-ஆம் தேதி தொடங்கும். இந்த தேர்வுகள் முடிந்த பிறகு, அடுத்த செமஸ்டர் வகுப்புகள் ஜனவரி 5-ஆம் தேதி முதல் தொடங்கும்.
 
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

பாகிஸ்தானில் திறக்கப்படும் முதல் கூகுள் அலுவலகம்.. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திறந்து வைத்தார்...

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆகிறாரா முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்.. சுயசரிதையும் வரப்போகிறதா?

திமுகவை அடுத்து அதிமுகவிலும் நிர்வாக ரீதியான மாற்றமா? கூட்டத்தை கூட்டும் ஈபிஎஸ்...

பள்ளிகளை ஆய்வு செய்யும் கரப்பான்பூச்சி கட்சி.. வாடகைக்கு மாணவர்களை கொண்டு வந்த பள்ளி நிர்வாகம்..

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த ரோபோ.. 26 வினாடிகள் குறைவு..

அடுத்த கட்டுரையில்
Show comments