பாமக தலைவரானார் அன்புமணி ராமதாஸ்!!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பாமகவின் தலைவராக கடந்த பல ஆண்டுகளாக ஜிகே மணி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாமகவின் பொதுக்குழு கூட இருக்கும் நிலையில் இந்த குழு பொதுக் கூட்டத்தில் ஒருமனதாக அன்புமணியை பாமகவின் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றபட்டது. பாமகவின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை ஜி.கே.மணி முன்மொழிந்து உரையாற்றினார்.
பாமகவில் இளைஞரணி தலைவராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் தற்போது பாமகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.