1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (12:11 IST)

அம்மாவின் ஆட்சியில் நுழையும் துணிச்சல் டெங்கு காய்ச்சலுக்கு இல்லை: அன்புமணி ஆவேசம்!

அம்மாவின் ஆட்சியில் நுழையும் துணிச்சல் டெங்கு காய்ச்சலுக்கு இல்லை: அன்புமணி ஆவேசம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது என அரசியல் கட்சிகள் கூறி வந்தபோது, அம்மா ஆட்சி நடக்கும் தமிழகத்தில் நுழையும் துணிச்சல் டெங்கு காய்சலுக்கு இல்லை என வசனம் பேசி வந்தனர் தமிழக அமைச்சர்கள்.


 
 
ஆனால் தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. தினமும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பல உயிர்கள் பலியாகின்றன. 13 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில் தமிழக அரசையும், டெங்குவை கட்டுப்படுத்த உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காத சுகாதாரத்துறை அமைச்சரையும் கடுமையாக விமர்சித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில், தமிழக ஆட்சியாளர்கள் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
டெங்குக் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய போதெல்லாம் அம்மாவின் ஆட்சி நடக்கும் தமிழகத்தில் நுழையும் துணிச்சல் டெங்குக் காய்ச்சலுக்கு இல்லை என்று ஆட்சியாளர்கள் வீரவசனம் பேசினார்கள்.
 
கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி சேலம் மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் அடுத்த 10 நாட்களில் டெங்குக் காய்ச்சல்  கட்டுப்படுத்தப்படும் என்று கூறினார். டெங்கு போன்ற எந்தக் காய்ச்சலையும் கட்டுப்படுத்தி ஓட ஓட விரட்டச்செய்யும் வல்லமை அம்மா அரசுக்கு உண்டு என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.
 
ஆனால், அமைச்சர் அவ்வாறு கூறி இரண்டு மாதங்களாகி விட்ட நிலையில் தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திலிருந்து 13 ஆயிரமாக அதிகரித்து விட்டது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை முப்பதிலிருந்து 90 ஆக உயர்ந்திருக்கிறது என கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ். மேலும் அவர் தமிழகத்தில் மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி டெங்குவை கட்டுப்படுத்தலாம் என கூறியுள்ளார்.