செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2015 (06:00 IST)

ஆனந்த விகடன் மீது மீண்டும் அவதூறு வழக்கு

ஆனந்த விகடன் இதழ் மீது, தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற வார இதழ் ஆனந்த விகடன். இந்த நிலையில், இந்த இதழின் இதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் மீது, தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் சார்பில் அவதூறு வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜூன் 17 ஆம் வெளியான ஆனந்த விகடன் இதழில், மந்திரி தந்திரி என்ற பெயரில் அவதூறு செய்திக் கட்டுரை வெளியானதாக புகார் தெரிவித்துள்ளார்.
 
எனவே, ஆனந்த விகடன் ஆசிரியர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
 
ஆனந்தவிகடன் இதழ் மீது ஏற்கனவே, மந்திரி தந்திரி என்ற பெயரில் வெளியான செய்திக் கட்டுரைகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் சிலர் அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடதக்கது.