வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By SInoj
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (18:57 IST)

''ஓட்டுக்கு திமுகவினர் தரக்கூடியது கஞ்சா மூலம் வந்த பணம்''- அண்ணாமலை

Annamalai
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இந்த நிலையில், இன்று கோவை- மேட்டுபாளையத்தில், பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 
இதில், பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர்  உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
 
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ஓட்டுக்கு திமுகவினர் கொடுக்கும் பணம் கஞ்சா மூலம் வந்த பணம் என்று தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
இந்த முறை திமுககாரர்கள்  யாராவது தன்னுடைய பாக்கெடில் இருந்து ஓட்டிற்குப்பணம் கொடுத்தால், அது கஞ்சா மூலமாக வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை உறிஞ்சிப்போகிற பணம் என்பதை மறந்துவிடாதீர்கள். என்று கோவையில் நடந்த பாஜக பிரசாரப் போதுக்கூட்டத்தில் அவர் கூறினார்.