வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (05:22 IST)

அண்ணன் இறந்த அடுத்த நாளே ராணுவத்திற்கு செல்லும் தம்பி! ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்

சமீபத்தில் சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் தாக்குதலால் பலியான 26 வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த அழகுபாண்டி. இவருடைய உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளே அவருடைய தம்பி பவித்ரன் நாட்டுக்காக சேவை செய்ய ராணுவத்தில் சேரவுள்ளார்.



 


மேலும் அழகுபாண்டி, பவித்ரன் ஆகியோர்களின் தந்தை பிச்சை அழகு என்பவரும் ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மூத்த மகன் ராணுவத்தில் பணியாற்றி தேசத்திற்காக உயிர் நீத்த நிலையிலும் தனது இரண்டாவது மகனை ராணுவத்திற்கு நெற்றி மீது முத்தமிட்டு அனுப்பும் பிச்சை அழகு அவர்களை அந்த பகுதியில் உள்ளவர்கள் பாராட்டி வருகின்றனர். தந்தை பிச்சை அழகுவின் தேசப்பற்று ஊர்மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.