வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (12:44 IST)

பிடி கொடுக்காத தலைமை: அழகிரியால் பூஜ்ஜியமான துரைதயாநிதி?

அழகிரி மீதுள்ள எதிர்ப்பால் துரைதயாநிதியையும் கட்சிக்குள் சேர்க்க திமுக தலைமை மறுப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. 

 
கடந்த 2014 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி திமுக தலைவராக  இருந்த போது முக அழகிரி அக்கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். கலைஞரின் மரணத்திற்குப் பிறகும் ஸ்டாலின் முக அழகிரியை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
திமுகவுக்குள் எப்படியும் ஐக்கியமாவது என தீவிரம் காட்டிய அழகிரிக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. சரி தனக்குதான் கட்சிக்குள் இடமில்லை மகனுக்காவது கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். 
அதன்படி, முரசொலி அறக்கட்டளைக்கு உதயநிதி இருப்பது போல திமுகவின் சொத்துகள் தொடர்பான அறக்கட்டளைக்கு அழகிரி மகன் துரைதயாநிதியை நியமிக்க வேண்டும் என கேட்டுப்பார்த்தார். ஆனால், இது வேலைக்கு ஆகவில்லை. 
 
அதன் பின்னர் தென்மண்டல பதவி உள்ளிட்ட பல்வேறு பதவிகள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது அதற்கும் தலைமை பிடிகொடுக்கவில்லை. ஆனால், உதயநிதிக்கு இளைஞர் அணி செயளாலர் பதவி கொடுத்து, அடுத்து சென்னை மேயர் பதவிக்கு போட்டியிடும் அளவிற்கு தகுதிகளை வளர்த்துவிடுவதால் அழகிரி அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.